Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 15 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
'நாவிதன்வெளிக் கோட்டத்தில் தமிழர்களே அதிகமாக வாழ்வதுடன், யுத்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் தமிழர்களே. ஆகையால், இந்தக்; கோட்டத்துக்கு கட்டாயமாக தமிழர் ஒருவரே கோட்டக் கல்விப் பணிப்பாளராக வரவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டேன்' இவ்வாறு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்
நாவிதன்வெளிக் கோட்டத்துக்கு புதிதாக நியமனம் பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்தை வரவேற்கும் நிகழ்வு, சவளக்கடை விநாயகர் வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நாவிதன்வெளிப் பிரதேசம் பின்தங்கிய பிரதேசமாகும். அத்துடன், இங்கு சகோதர இனமான தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இதனால், தமிழர் ஒருவரையே இந்தக் கோட்டத்துக்கு பணிப்பாளராக நியமிக்கவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தேன். ஆனால், சிலர் தவறான செய்திகளை பரப்பி முஸ்லிம் ஒருவரை நிரந்தரமாகக் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தது வேதனைக்குரிய விடயமாகும்.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள 22 பாடசாலைகளில் அதிகமான பாடசாலைகள் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளாக உள்ள நிலையிலும் தமிழ்ப் பிள்ளைகள் அதிகமாக உள்ள நிலையிலும் அவ்விடத்துக்கு தமிழர் ஒருவரை நியமிக்குமாறு பல தடவை செயலாளரிடம் கூறியிருக்கின்றேன்' என்றார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago