Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 15 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
சமூக சேவை நிறுவனங்கள் அரசின் அபிவிருத்தி திட்டங்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ. அன்வர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை மனித எழுச்சி நிறுவனத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (14) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
மனித எழுச்சி நிறுவனமானது அம்பாறை மாவட்டத்தில் வாழும் வறிய மக்களை இனங்கண்டு, அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. அந்த வகையில் இந்த நிறுவனம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து அதன் சமூக நலன் திட்டங்களை நேர்த்தியான முறையில் முன்னெடுத்து செல்கின்றது.
சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தினையும் இந்த மனித எழுச்சி நிறுவனம் அறிமும் செய்துள்ளது. இதன் எதிர்கால வளர்ச்சிக்கு அங்கத்தவர்களின் பங்களிப்பு அவசியமாகும் என்றார்.
7 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
56 minute ago
2 hours ago