2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 15 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மணற்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக கோமாரி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மணற்சேனை கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய சுதாகரன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

மணற்சேனை அம்மன் கோவிலுக்கு  அருகில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போதே  இவர் அசம்பாவிதத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றையதினம்  இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X