Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 16 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பாலமுனை பிரதான வீதியில் இரவு நேரத்தில் பயணம் செய்வோரின் நலன் கருதி அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் பொருத்தப்பட்டுள்ள 'சோலர்' சக்தி மின்விளக்குகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வீதி, வயல் மற்றம் ஆற்றை ஊடறுத்துச் செல்வதால் இரவு நேரங்களில் இவ்வீதியினால் செல்வோர் காட்டு யானைகள் மற்றும் முதலைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாக வேண்டியுள்ளது. அத்துடன், இரவு வேளையில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேச சபை மக்களின் நலன்கருதி சில மாதங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று - கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதேசங்களை இணைக்கும் பிரதான வீதியில் மின்கம்பங்களை அமைத்து மின் குமிழ்களையும் பொருத்திருந்தனர்.
எனினும், இந்த மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் குமிழ்களின் தற்போது ஒளிர்வதில்லை. சூரிய சக்தியில் இயங்கும் 06 தெரு மின் விளக்குகளுடனான கம்பங்களை நிர்மாணிக்கப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் 05 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஆனால், மக்களுக்கு எதுவித பயனும் இதுவரை கிடைக்கவில்லை. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஒளிராத தெரு மின் விளக்குகளை ஒளிரச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுள்ளனர்.
4 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
02 Oct 2025
02 Oct 2025