2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சுனாமி வீட்டுத்திட்டத்துக்கான காணி உறுதிப்பத்திரங்கள் கோரி மகஜர்

Princiya Dixci   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, சம்புநகர் சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டுத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கக்கோரிய மகஜர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (16) கையளிக்கப்பட்டது. 

08 வருடங்களுக்கு முன்னர் 'ஹெல்ப் ஏஜ்' அரச சார்பற்ற நிறுவனத்தினால் விஷேட தேவையுடைய 25 குடும்பங்களுக்கு சம்புநகர் சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்பட்டன.  

எனினும், இதுவரை காலமும் குறித்த வீடுகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக இந்த மீள் குடியேற்ற குடும்பத்தினர் மகஜரில் குறிப்பிட்டிருந்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் திருகோணமலை முதலமைச்சர் காரியாலயத்தில் இந்த மகஜர், முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. 

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், சம்புநகர் மீள்குடியேற்ற சங்கத் தலைவர் ஏ.தஸ்லீம் ஆகியோர் உடன் இருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X