Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்கான தனிக் கல்வி வலயம் ஒன்றை அமைப்பதற்காக தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான விமலவீர திஸாநாயக தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற அமர்வின் போதே மேற்கண்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேசம் தனியான கல்வி வலயம் ஒன்றின் கீழ் அமையாததன் காரணமாக கல்வித்துறையில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
'தற்போது பொத்துவில் உபகல்வி வலயமாகவே இன்னும் இயங்கிக்கொண்டு வருகின்றது. இதனால் உரிய வளப்பங்கீடுகள், ஏனைய வசதி வாயப்புக்கள் இங்கு கிடைக்கப் பெறாமையினால் கல்வித்துறையில் பல சவால்களை எதிர்நோக்கி வருவதாக பொத்துவில் பிரதேச சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஏ.எம்.ஏ.மஜீத் மற்றும் அப்பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.' என அவர் கூறினார்.
'மேற்படி விடயம் தொடர்பாக தன்னால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பொத்துவில் பிரதேசத்தின் தனியான கல்வி வலயத்துக்கான தனிநபர் பிரேரனையை எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏகமனதாக அங்கிகரித்தமைக்கு அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்தார்.
இன்னும் சில வாரங்களில் மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு இப்பிரேரணையை கொண்டு சென்று அனுமதி பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
02 Oct 2025
02 Oct 2025