2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

கடந்த யுத்த காலத்தில் காணாமல் போனோர்கள், அங்கவீனர்கள் மற்றும் சொத்துக்களை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்டவுள்ளன.

இதற்கமைய காணமல் போனோர்களின்  உறவினர்களுடனான சந்திப்பு, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நேற்று (17) புதன்கிழமை மாலை திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது காணாமல் போனோர்கள், அங்கவீனர்கள் மற்றும் சொந்துக்களை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நஷ;டஈட்டை  பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் சம்மந்தமாகவும் உயிரிழப்பு மற்றும் அங்கவீனம், சொத்து இழப்புக்களுக்கான நஷ்டஈடு சம்மந்தமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

உயிரிழப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவும் அங்கவீனம் மற்றும் சொத்து இழப்புக்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நஷ்டஈடு பெறுவதற்கான  விண்ணப்பப்படிவங்களை கிராம சேவகர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X