2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தோணா புனரமைப்புப் பணிகளை நிஸாம் காரியப்பர் பார்வை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சாய்ந்தமருது தோணா புனரமைப்பு பணிகளை கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருமான எம்.நிஸாம் காரியப்பர் இன்று (18) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

தோணா அபிவிருத்தி திட்டத்தின் முதல்; கட்டப் பணிகள் கடந்த 15ஆம் திகதி நகர அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் தோணாவை சுத்தமாக்கும் பணிகள் முடிவுறும் கட்டத்துக்கு வந்துள்ளதை தொடர்ந்து இரண்டாம் கட்டப் புனரமைப்பு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை சாய்ந்தமருது தோணாவை நவீன முறையில் முழுமையாக அபிவிருத்தி செய்து அழகுபடுத்தும் திட்டத்துக்கு வெளிநாடுகளின் நிதி உதவிகளைப் பெறுவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக  முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X