Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறையினை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 08 ஆவது ஆண்டு ஞாபகாத்த கத்தமுல் குர்ஆனும் துஆப் பிராத்தனை நிகழ்வும் வெள்ளிக்கிழமை (19) சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வை.பீ.சலீம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.அமீர் (நளீமி), துஆப் பிரார்த்தனையை சம்மாந்துறை ஜமியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் எம்.ஐ.ஹச்சுமுஹம்மட் (மதனி) செய்து வைத்தார்.
அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த உரையினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.எம்.பாஸில் மற்றும் தமிழ்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் ஆயோர்கள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் கலாநிதி பாஸில் உரையாற்றுகையில்,
மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் வெறும் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கோ அல்லது அம்பாறை மாவட்டத்துக்கோ உரித்தான ஒரு அரசியல் தலைவராக மிளிரவில்லை. அவர் ஒரு தேசிய பார்வையுடன் கூடிய தேசிய அரசியலை செய்;த தலைவராக நோக்கப்பட்டார்.
எதிர்கால சந்ததியினரைக் கருதிற்கொண்டு தூரநோக்கோடு சிந்தித்து செயல்பட்டவர். அவர் கல்வி கற்கின்ற காலம் தொட்டே தாம் சார்ந்த சமூகத்தின் எதிகாலம் பற்றி சிந்தித்தவர்.
மேலும், தனது சட்டக்கல்விக்கான பிரவேசத்தின் போதும் தமது சமூகம் சார் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டவர். சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தம் சமூகத்துக்காக செயல்பட்டவர்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து இரண்டு பீடங்களை கொண்டு வருவதற்கான முயற்சியினை செய்து அதில் ஒன்றான அரபு இஸ்லாமிய பீடத்தை உருவாக்கி, அவற்றில் இன்று சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கச் செய்த பெருமையும் அந்தப் பல்கலைக் கழகத்தை எமது தலைவர் கொண்டுவந்த நோக்கத்தையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கச் செய்து கொண்டிருக்கின்ற பேருமையும்; மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலினையே சாரும் எனவும் தெரிவித்தார்.
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025