Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'அமைதியான சூழ்நிலையும் கூட்டுப்பொறுப்புமே எமது பல்கலைக்கழத்தின் அபார வளர்ச்சிக்கு காரணம்.' என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் 06 வருட சேவை நிறைவினை முன்னிட்டு சேவைநலன் பாராட்டுவிழா வெள்ளிக்கிழமை (19) பல்கலைக்கழக நூலகமுன்றலில்; நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடரந்து அவர் உரையாற்றுகையில்,
'பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி என அதன் பௌதிக மற்றும் கட்டுமான விருத்திகளை மட்டும் கூறமுடியாது. உலகளாவியரீதியில் ஏனைய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரத்திற்கும் அமைவாக தனது வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காணவேண்டும்'.
'சர்வதேச தரப்படுத்தலில் 16 ஆயிரம் இடத்திலிருந்த இந்த பல்கலைக்கழகம் இன்று 8 ஆயிரம் இடத்திற்கும் தேசியரீதியில் 05ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. இதனால் உள்ளூரில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பினை பெற்றுள்ளனர். இதன் பலன் இன்று பல நாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர்கின்றனர்;. மிகவும் திறமையான விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் வளத்தை கொண்டு விளங்குகின்றது'.
'அதுமட்டுமல்லது மிகக் குறுகிய காலப்பகுதியினுள் பொறியியல்பீடம் மற்றும் ஏனைய முக்கிய தனியான திணைக்களங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளமை அதன் சாதனை என்றே குறிப்பிட வேண்டும்'.
'இவ்வாறான முன்னேற்றத்களுககும் புகழுக்கும் காரணம்; நமது பல்கலைக்கழக ஊழியர்களும் நிர்வாகிகளும் மாணவர்களுமே' என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
14 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago