Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 21 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சிக்கான நிதிக் கொள்கை அமுல்படுத்த வேண்டும் என்ற தனிநபர் பிரேரனை தொடர்பாக அவர் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக மூவின மக்களின் இன ஒற்றுமைக்கு வித்திட்டோம். இவ்வாறு பெரும் தியாகத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமையை தற்போதைய கூட்டாட்சியின் கீழ் நடைபெறும் சில தவறான செயற்பாடுகளினால் சமூகங்கள் மத்தியில் சந்தேக நிலைமையை உருவாக்கியுள்ளது.எனவே, கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் அமைய இருக்கும் கிழக்கு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளும் சமூகங்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்க சந்தர்ப்பங்களை வழங்கியதாக அமைந்துவிடும்.
முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து கூட்டாட்சி உருவாக்கப்பட்டு 03 மாதங்கள் சென்ற பின்னும் இதுவரை கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வெளிவரவில்லை. அமைச்சரவை தீர்மானங்களும் வெளியே வரவில்லை. வரவு -செலவு திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விபரங்கள் ஆளுங்கட்சியினர்களுக்கே தெரியாது என்ற நிலமை உருவாகியுள்ளது.
கிழக்கு மாகாண கூட்டாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago