Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 22 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நான்காவது புதிய உபவேந்தராக இன்று தொடக்கம் செயற்படும் வண்ணம் பேராசிரியர் நாஜிம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார், இன்று (22) திங்கட்கிழமை தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயிலின் பதவிக்காலம் கடந்த 21ஆம் திகதியுடன் முடிவுற்றது.
உபவேந்தர் தெரிவுக்காக கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்று முதலாமிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் நாஜிமின் பெயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிபாரிசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
1968ஆம் ஆண்டு பிறந்த உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் தனது உயர்கல்வியை பேராதனை பல்கலைக்கழககத்தில் கற்று தேறியதோடு தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50ற்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ஆய்வுகளில் 20ற்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள் தனது ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஜனாதிபதி வருதும் பெற்றுள்ளார்.
மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025