2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவியேற்பு

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், ஒலுவில் வளாகத்தில் வைத்து புதன்கிழமை (24)  உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், வரிவுரையாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாணவர்கள் மற்றம் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றம் மதகுருமார்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்ற பேராசிரியர் நாஜிம், அப் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆய்வுதழ்களில் 20க்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள் தனது ஆய்வு கட்டுரைகளுக்கு ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயிலின் பதவிக்காலம் கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X