2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா

நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக காசோலைகள் வழங்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 
 
பிரதேச செயலாளா றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார். 

மாதமொன்றுக்கு 3,0000 ரூபாய் படி ஆறுமாதங்களுக்கான தொகை 18,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

54 மாற்றுத்திறனாளிகளுக்கும் சுமார் 09 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.திரவியராஜ், பிரதம கணக்காளர் ஏ.எம்.நிசாம் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் இனங்காணப்பட்ட விசேட தேவையுடையோர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 60,000 ரூபாய் பெருமதியான இரண்டு முச்சக்கர சைக்கிள்கள் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் பிரிவின் உத்தியோகஸ்தர் எஸ்.உதயநாதன் தலைமையில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் இரு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.பாஸ்கரன், சிரேஷட முகாமைத்துவ உதவியாளர் ரி.மோகனராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X