Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 24 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா,எம்.எஸ்.எம்.ஹனீபா
சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் மாற்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் துணை போகாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத்தொகுதி பிரசார இணைப்புச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று (23) பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஐ.தே.கட்சியில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் முண்டியடிக்கின்றனர்.
இதனால், இன்று எதிர்க்கட்சி பயப்படுகிறது. எந்த முறையில் தேர்தல் நடந்தாலும், ஜ.தே.கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும். இதற்காக பங்களிப்பு செய்வதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களும் தயாராகவேண்டும்.
சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் மாற்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் துணை போகாது. அதில் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் உறுதியாக இருக்கின்றார். எந்தவொரு விடயத்திலும் சிறுபான்மை மக்கள் பிரதமர் ரணிலை நம்பமுடியும். அவர் ஒருபோதும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைக்கமாட்டார்.
இந்த நல்லாட்சி நீடிக்கவேண்டும். நல்லாட்சியை உருவாக்க பெரும் பங்காற்றிய முஸ்லிம்கள் அதனை பாதுகாப்பதிலும் கரிசனை செலுத்தவேண்டும்' என்றார்.
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025