Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜூன் 25 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கணவனை இழந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், வீடுகள் இல்லாமல் இருக்கும் பெண் தலைமை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக 23ஆம் திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திருக்கோவில் திவிநெகும தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற போது திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முதல் கட்டமாக மூன்று வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளதுடன் வீட்டினை நிர்மானப் பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆரம்ப கொடுப்பனவாக பயனாளிக்கு 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் வீடுகள் திவிநெகும திவ்யபியச வீட்டுத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் பாலக்குடா,சின்னத்தோட்டம் மற்றும் தாண்டியடி கிராமங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன்,கணக்காளர்.எம்.அரசரெத்தினம், திவிநெகும உத்தியோகத்தஸ்தர்களான எஸ்.பி.சீலன் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு வீடுகளுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளனர்.
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Oct 2025
02 Oct 2025