Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 25 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
பாடசாலைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியின் பாதசாரிகள் கடவையில் மாணவர்கள் செல்லும் போது, போக்குவரத்து பொலிஸாரின் சைகையை மீறி பாதசாரிகள் கடவைக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய ஆசிரியருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எச்.எம்.பஸீல் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு சாகாமம் வீதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னால், உள்ள பாதசாரிகள் கடவையில் மாணவர்கள் செல்லும் போது, ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிளை பாதசாரிகள் கடவைக்குள் செலுத்தியுள்ளார்.
இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். எனினும் சைகையை பொருட்படுத்தாத ஆசிரியர் பாதசாரிகள் கடவையை கடந்து பயணித்துள்ளார்.
இதன்பின்னர் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து சென்று, ஆசிரியரை கைது செய்த பொலிஸார் நேற்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்துள்ளனர்.
இதன்பின்னரே நீதவான் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025