Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஜூன் 25 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு, கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமின் முயற்சியினால் கிழக்கு மாகாணசபை ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் மூலமே இந்த மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக முதல்வர் நிஸாம் காரியப்பர், அதிகாரிகள் சகிதம் இன்று வியாழக்கிழமை (25) குறித்த இடத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
குறித்த மைதான அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உத்தேச வேலைகள் பற்றிய மதிப்பீடுகளையும் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட முதல்வர், இத்திட்டத்தை கூடிய விரைவில் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025