2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தமிழ் இலக்கிய விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

Princiya Dixci   / 2015 ஜூன் 26 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இவ்வருடம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ்.தண்டாயிதபாணி தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியு.ஏ.ஐ. விக்கிரமஆராய்ச்சி, கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அனுபவமிக்க கலை, இலக்கியவாதிகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
 
கடந்த தமிழ் இலக்கிய விழாவில் காணப்பட்ட குறைபாடுகள், தவறுகளை நிவர்த்தி செய்து இம்முறை மிகவும் சிறந்த முறையில் நடத்துவதற்கான திட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போது அவற்றை கவனத்திற்கொள்வதாக அமைச்சர் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X