Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 26 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய உல்ல பகுதியில் யாத்திரிகள் பயணித்த டிப்பர் வாகனம் இன்று வெள்ளிக்கிழமை (26) மாலை விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்று, உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தினூடாக கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற அடியார்களின் சிறிய ரக டிப்பர் வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.
காயடைந்து 11 பேரும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025