Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 28 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கேரள மற்றும் உள்ளூர் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (27) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டபோது, கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரைப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து, 506 கிராம் கேரள கஞ்சா மற்றும் 200 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் அப்துல் லத்தீப் முஹம்மத் பாயிஷ் (வயது 31) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் உள்ளூர் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றைக் கடத்தி வந்து அவற்றுக்கு யூரியா, மோர்ட்டின் திராவகம் மற்றும் பி கொம்ப்ளெக்ஸ் மாத்திரை என்பனற்றில் கஞ்சாவை ஊறவைத்து மேலும் போதையூட்டி விற்பனை செய்து வருவதாகக்கிடைத்த உளவுத் தகவலை வைத்தே தாம் இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை குற்றத்தடுப்பு தலைமைப் பொலிஸ் அதிகாரி அப்துல் கப்பார் தலைமையிலான பொலிஸ் அணியினர் இந்த கஞ்சா மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025