Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 163 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை மற்றும் அம்பாறை நகர மண்டபங்களில் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்றது.
அரசின் 100 நாட்கள்; வேலைத்திட்டத்துக்கு அமைவாக 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில், பொத்துவில் பிரதேச சபையில் கடமையாற்றிய 15 பேருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 20 பேருக்கும் சம்மாந்துறை பிரதேச சபையில் 34 பேருக்கும் கல்முனை மாநகர சபையில் 19 பேருக்கும் நிந்தவூர் பிரதேச சபையில் 12 பேருக்கும் காரைதீவு பிரதேச சபையில் 18 பேருக்கும் இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சம்மாந்துறை நகரமண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் எம்.இர்சாட், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசித் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.
இதேவேளை, அம்பாறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாநகர சபையிலிருந்து 21 பேரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் 06 பேரும் திருக்கோவில் பிரதேச சபையில் 10 பேரும் மகாஓய மற்றும் லாகுகல பிரதேச சபையில் தலா 02 பேர் வீதமும் பதியத்தலாவ, நாமல் ஓய, உகண மற்றும் இறக்காமம் பிரதேச சபையிலிருந்து தலா ஒருவர் வீதமும் இந்த நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025