Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 28 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
பொத்துவில் 10ஆம் கட்டை பிரதான வீதியில் விஷேட அதிரடிப்படை முகாம் அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மொன்றாகலயிலிருந்து பொத்துவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் பொத்துவிலில் இருந்து மொன்றாகல நோக்கி சென்ற ஜீப் வண்டியும் நேரக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளிலை ஓட்டிச்சென்ற கமநேரு தெனியன் (33 வயது) என்ற மீன் வியாபாரியே உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பொத்துவில் பிரதேசத்துக்கு ஜீப் வண்டியில் சுற்றுலா வந்த குழுவினர் பொத்துவிலில் இருந்து மொனராகல நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது பொத்தவில் 10ஆம் கட்டை பிரதான வீதி விசேட அதிரடி படை முகாம் அருகில் மீன் வியாபாரியின் மோட்டார் சைக்கிளும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த 5 பேர் காயமடைந்து மொன்றாகல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொத்துவில் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
27 Jun 2025