2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்தவர் விளக்கமறியலில்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

போதைப்பொருள் வைத்திருந்ந நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (27) அக்கரைப்பற்று பதில் நீதவான் எஸ்.எல்.ஏ. றஸீட், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று -14 ஆம் பிரிவைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று பொலிஸ் குற்றத்தடுப்பிரிவினர் கடந்த 24 ஆம் திகதி இரவு, பதுர் நகர் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட வேளை அந்நபர் சைக்கிளையும் தொப்பியையும் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸார் கைவிடப்பட்ட  தொப்பியினுள் இருந்து 22.460 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட  பொருட்களைக் கொண்டு பொலிஸார் நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்து சந்தேக நபரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக பிடியாணையொன்றை பெற்றிருந்தனர்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X