2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

இரு இனங்களின் பலம் காரணமாகவே நிரந்தர நியமனம் கிடைத்துள்ளது: மன்சூர்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஏற்படுத்திக்கொண்ட வலுக்கட்டாயமான உறவின் காரணமாகவே இன்று உள்ளூராட்சி மன்ற  ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்ற உள்ளூராட்சிமன்றங்களில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய 686 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நியமனங்கள் கடந்த மாதம் வழங்கப்படவிருந்த போதும் அவற்றில் ஏற்பட்ட பலதரப்பட்ட பிரச்;சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் இன்று அதுவும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுநாள் உங்களுக்கு இந்த நியமனம் கிடைக்கின்றது.

அரச தொழில் வழங்கும் நியமங்களின் அடிப்படையில் 10 தொடக்கம் 20 வருடகாலம் தற்காலிகமாக மாதாந்தம் வெறும் 500 ரூபாய் வேதனத்துடன் தொழிலில் இணைந்து கொண்ட நீங்கள் இந்த ஆண்டில் நிரந்தர ஓய்வூதியமுடைய தொழில்களை பெற்றுக்கொள்வது என்பது சிறப்புக்குரியதாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X