2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

'சதிவலையிலிருந்து சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்'

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

20ஆவது சீர்திருத்தம் என்ற போர்வையில் விரிக்கப்பட்ட சதிவலையிலிருந்து சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்ற நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

20ஆவது சீர்திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு ஆபாத்தானதும் அநீதியானதும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம்; எதிர்த்ததன் விளைவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலமைச்சரிடம் இன்று வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பாக கேட்கப்பட்டிருந்தும் அது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

நல்லாட்சியின் பின்னர் ஜனாதிபதியின் 100 நாட்கள்  வேலைத்திட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்ற உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் எடுத்துக்கொண்ட துரித முயற்சியே இந்த நியமனத்துக்கு அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X