2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

Thipaan   / 2015 ஜூன் 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றிய 19 ஊழியர்கள் கல்முனை மாகர முதல்வர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் முன்னிலையில் தமது கடமைகளை இன்று திங்கட்கிழமை(29)  பொறுப்பேற்றுள்ளனர்.

கல்முனை மாநகர சபையில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய ஊழியர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.

தமது நிரந்தர நியமனத்திற்காக நடவடிக்கை எடுத்தமைக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பருக்கு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (26) கிழக்கு மாகாண சபையினால் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X