Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 29 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ஷஹரின் எம். இஸ்மத்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேயவர்தன கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, முன்பள்ளி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாடோவினால் இன்று திங்கட்கிழமை (29) வழங்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
தற்போது கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, முன்பள்ளி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பதில் செயலாளராக இதுவரை கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஐ. திஸாநாயக்க, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக தொடர்ந்தும் கடமையாற்றுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago