Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 30 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுப்பதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் உறுதியளித்துள்ளார் என்று மூன் பிறைட் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம், இன்று செவ்வாய்க்கிழமை (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2001ஆம் ஆண்டு ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டு அதில் கிழக்கு மாகாணம் உட்பட வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் பலர் ஊடகக் கற்கைநெறியை பூர்த்தி செய்துள்ளனர்.இதன் பின்னர் இக்கற்கை நெறியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியை ஆரம்பிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றக்கொண்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விரைவில் ஊடகத்துறை கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென உறுதியளித்தள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025