Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 30 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை அமைத்துக் கொடுக்கும் கனவு இன்னும் கலைந்து விடவில்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, இன்று செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை அமைத்துக்கொள்ளும் சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கைள், அபிலாசைகள் ஒரு போதும் வீண்போகாது. எமக்கான அரசியல் அதிகாரம் கிடைத்ததும் அது நிச்சயம் நிறைவேறும்.
சனத்தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு வளங்களை பிரித்துக் கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு புதிய சபைகளை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.
சிலர் ஆளுவதற்காகவும் அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகவும் சமூகத்தினது அல்லது ஒரு பிரதேசத்தினது உணர்வுகளில் கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
ஒரு சமூகத்தின் பெயரை முன் நிறுத்திக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது சுயநலத்துக்காக இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் இருந்து தனது சமூகத்துக்கான எந்த பணிகளையும் செய்யாத இவர், தற்போது இருக்கின்ற புதிய அமைச்சரவையிலும் எந்தவிதமான நன்மதிப்பையும் பெற்றிருக்கவில்லை.
அவ்வாறாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வீடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைப் போன்று தன் சமூகம் தொடர்பில் குரல் கொடுத்து வருவதையாவது செய்ய வேண்டும் என்றார்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025