Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதுக்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் மிக விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் ஒன்றியம், நேற்று செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தது.
2014ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்துக்கமைய அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை அரசாங்கம் மானிய அடிப்படையில் வழங்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
இதனையடுத்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து வெளிக்கள உத்தியோகஸ்தர்களும் இணைந்து அம்பாறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தி அரசாங்க அதிபரிடம் மகஜரையும் கையளித்திருந்தோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அம்பாறை மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு மானிய அடிப்படையிலான மோட்டார் சைக்கிள் வழங்கப்படாமைக்கான காரணத்தை அறிவிக்குமாறு கேட்டிருந்தும், இதுவரையில் காத்திரமான எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே, இன்னும் ஒரு வார காலத்தில் திருப்தி அளிக்கக் கூடிய எந்தவொரு பதிலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்காவிடின், அம்பாறை நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் அனைத்து உத்தியோகஸ்தர்களையும் ஒன்றிணைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் ஒன்றியம் மேலும் தெரிவித்தது.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025