2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கலைமான் மீட்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஆறு வயதான கலை மான் ஒன்றை வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (30) மீட்டனர். 

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுமாமி ஆலய பகுதியில் குறித்த மான் நடமாடியதையடுத்து ஆலய நிர்வாகிகள், தம்பிலுவில் வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தம்பிலுவில் வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஏ.ஏ.ஹலிம், மானின் உடல் நிலையை பார்வையிட்டதுடன் அம்பாறை வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள மருத்துவப் பிரிவினர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

தற்போது மான், ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுமாமி ஆலய முன்றலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளதுடன் உகந்தை வன ஜீவராசிகள் சரணாலயத்தில் இம்மானை விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தம்பிலுவில் வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஏ.ஏ.ஹலிம் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X