Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 01 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்திலுள்ள மீனவர்களின் நன்மை கருதி பல இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள எரிபொருள் கொள்கலன் மற்றும் உபகரணங்கள் என்பன கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவதோடு, துருப்பிடித்து போகக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள், இன்று (01) புதன்கிழமை விசனம் தெரிவித்தனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தன்னார்வ நிறுவனம் ஒன்றினால் ஆழ்கடல் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் உபகரணங்கள் எவ்வித செயற்பாடுகளுமின்றி காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்துக்கு நாளாந்தம் ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய பிரதேசங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மீன்பிடி வள்ளங்கள் வருகின்றன.
இம் மீனவர்கள் எரிபொருள் பெறுவதற்காக வேண்டி சுமார் 05 கிலோ மீற்றர் தூரத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கு பொருத்தப்பட்டுள்ள எரிபொருள் நிலையத்தினை இயங்க வைத்தால் இலகுவாக மீனவர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகினறது.
இது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை அல்லது அட்டளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நடவடிக்கை எடுத்து தூர்ந்து போயுள்ள எரிபொருள் நிலையத்தை புனரமைத்து இலகுவாக எரிபொருள் வழங்குவதற்கு முன்வர வேண்டுமென ஆழ்கடல் மீனவர்கள் கேட்டுள்ளனர்.
ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் காணப்படுகின்றன.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025