Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன், எம்.ஸ்.எம். ஹனீபா
கூர்மை அடைந்து செல்லும் இனவாத அரசியல் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, முஸ்லிம்களின் சம உரிமைகளை வென்றெடுத்துப் பதிவுசெய்து கொள்வதற்காக சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு எல்லா மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு புதிய சகாப்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் நிலை தொடர்பாக கேட்டபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
விமர்சனத்துக்குரிய மஹிந்தவின் ஆட்சியை வெளியேற்றுவதில் வெற்றிகண்டு, விடியலை தொடக்கி வைக்கும் நல்லாட்சிக்கான முயற்சிகள் அரையும் குறையுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கொள்ளவுள்ள பொதுத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
திடுக்கிட வைக்கும் பல திருப்பங்களை தன்னகத்தே மூடி மறைத்திருக்கும் இந்தத் தேர்தலை ஒரு கலைக்கூத்தாடியின் நிதானத்தோடும் தீவிரதியாக சிந்தையோடும் எதிர்கொண்டு சிறுபான்மைச் சமூகங்களின் சம அந்தஸ்துக்கான கோரிக்கைகளை சாத்வீகமான முறையில் வென்றெடுக்கும் வழிவகைகளிலும் உபாயங்களிலும் சிரத்தையோடு செயற்பட வேண்டும்.
தனித்துவத்தை கட்டியெழுப்பும் தளராத முயற்சிகளை தாராளமயப்படுத்தி சகல முஸ்லிம்களையும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வழி நடாத்திச் செல்வதற்கான ஆரம்பப் போராட்டமாக இந்த பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் அணுக வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் தேவைகள் திசை மாற்றப்பட்டிருந்த போதும் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்கொண்டுவரும் நிலை அன்றைக்கு இருந்ததைப்போல ஒருவித பயங்கரவாதத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.
இந்த விடயத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று வழக்கொழிந்து போனது போல் இருப்பினும் அதனைத் துடைந்து துப்பரவாக்கி வெளிச்ச வீடாக இயங்கவைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
23 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago
02 Oct 2025