2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருது தோணா வீதிக்கு புதிதாக மின்னிணைப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 02 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அம்பாறை, சாய்ந்தமருது தோணா வீதிக்கு புதிதாக மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின்பொறியலாளர் எம்.ஆ.ர்.எம். பர்ஹான், இன்று வியாழக்கிழமை (02) தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது தோணா வீதி இதுவரையும் மின்சார வசதிகளற்றதாக இரவு வேளைகளில் மிகுந்த இருள் நிறைந்து காணப்பட்டது. 

இதன் காரணமாக சட்ட விரோத செயற்பாடுகளும் இடம்பெற்று வந்ததோடு, இவ்வீதியால் பயணம் செய்யும் மக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சாய்ந்தமருது தோணா வீதி தொடர்பாக கருத்தில் கொண்ட கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம் பர்ஹான் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் முதற்கட்டமாக முகத்துவாரத்தை அண்டிய வீதிக்கு புதிய மின் கம்பங்கள் இடப்பட்டு மின்சார கேபிள்கள் இடப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி வேலைகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X