Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 02 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச தபால் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு புதிய தபால் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள சீ. அருட்செல்வம், இன்று (02) கடமையை பொறுப்பேற்றார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இவர் அஞ்சல் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக கடமையாற்றிய ஆர்.எம்.எம். ரூபசுந்தர பண்டா கண்டி தெற்கு பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதையடுத்தே புதிய அஞ்சல் அத்தியட்சகராக சீ. அருள்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
1991ஆம் ஆண்டு இரண்டாம் தர அஞ்சல் அதிபராக, தபால் திணைக்களத்தில் நியமனம் பெற்ற அஞ்சல் அத்தியட்சகர் சீ. அருள்செல்வம் சில காலம் தபால் திணைக்களத்தில் கணக்கு பரிசோதகராகவும் கடமையாற்றியுள்ளார்.
2007ஆம் ஆண்டு முதலாம் தர தபால் அதிபராக பதவியுயர்வு பெற்ற இவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அஞ்சல் அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார்.
புதிதாக கடமையேற்றுள்ள அஞ்சல் அத்தியட்சகர் சீ. அருள்செல்வத்துக்கு அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கம் பாராட்டைத் தெரிவித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.
20 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago
02 Oct 2025