2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டிடத்துக்கான நிதி கையளிப்பு நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூலை 03 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை, ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டிடத்துக்கான நிதி கையளிக்கும் வைபவமும் இப்தார் நிகழ்வும் சம்மாந்தறை ஜம்இய்யத்துல் உலமாசபைக் கட்டடத்தில் நாளை சனிக்கிழமை (04) நடைபெறவுள்ளது. 

சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல்காதர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்தகொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் இலங்கை சவூதி ஆரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகரிகள், உலமாக்கள் மற்றும் புத்தீஜீவிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். 

மேலும், புனித ரமழான் மார்க்க சொற்பொழிவை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.  

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜம்இய்யத்துல் உலமா கட்டடத்துக்கான நிதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பெயரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அயராத முயற்சியினால் தபால் தொலைத்தொடர்புகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமினால் இந்த நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X