2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2015 ஜூலை 03 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த இல்லாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அதனுடைய தெரிவாக அமையும் என்றும் இன்னும் சில நாட்களில் தங்களுடைய இறுதியான நிலைப்பாட்டை எட்ட இருப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் இப்தார் வைபவமும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைமையகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது.

இதன்போது பொதுத்தேர்தலில் கட்சியின் செயற்பாடுகள், தேசிய இளைஞர் கவுன்சிலின் பங்களிப்பு என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய இளைஞர் கவுன்சிலின் தலைவர் சட்ட மாணவன் நௌஷாட் மஹ்ரூப், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரச்சார செயலாளர் சிறாஜ் மஸ்ஹூர், வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ், இளைஞர் கவுன்சிலின் இடைக்கால செயலாளர் நளீர் (இஸ்லாஹி), இளைஞர் கவுன்சிலின் உறுப்பினர்களான சப்ராஸ், பஹீம் ஹனீபா மற்றும் அர்க்கம் முனீர் உட்பட இன்னும் பல முக்கிய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X