2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

டைனமைட் வெடிபொருட்களுடன் நான்கு மீனவர்கள் கைது

George   / 2015 ஜூலை 03 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

சட்டவிரோதமான முறையில் டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட தயாராகவிருந்த நான்கு மீனவர்களை அக்கரைப்பற்று பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை (03) நண்பகல் கைதுசெய்தனர்.

அக்கரைப்பற்று பொலிசாருக்கு கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து ஒலுவில் துறைமுகத்தில் வைத்து குறித்த  மீனவர்களை கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 டைனமைட் வெடிபொருட்களையும் அலியா படகையும் கைப்பற்றியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை, திக்வெல்லை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X