Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
எதிர்வரும் பொது தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என பொருளாலர் ஜே.எம். வஸீர் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பாக ஆராயும் உயர்பீடக் கூட்டம் வெள்ளக்கிழமை (03) தேசிய காங்கிரஸ் கட்சியின் தலையைகத்தில் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகளின் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜக்கிய தேசியக் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
21 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
9 hours ago
02 Oct 2025