Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஆதரிப்பது என உலமா கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் (03) தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சேவைகளை செய்த கட்சிகளுள், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மிக பிரதானமானதாகும்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மக்கள் அபிமானம் பெற்ற எளிமையான சிறந்த தலைவராக நாட்டை கொண்டு செல்கிறார் என்பதை எமது கட்சி அவதானித்து வந்துள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவது சமாதானத்தை விரும்புவோர் என்ற வகையில் எமது கட்சியின் கடமையாகும்.
இந்த வகையில் ஜனாதிபதியையும் அவர் தலைமையிலான சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை பலத்த மசூறாவின் பின் முடிவெடுத்துள்ளது.
அதன் படி எதிர்வரும் போது தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் உலமா கட்சி, ஜனாதிபதியின் தலைமைலான சுதந்திர கட்சியை ஆதரிப்பதுடன் அதன் வெற்றிக்காக நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக மௌலவி முபாறக் அப்துல் மஜீட்; தெரிவித்தார்.
17 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
9 hours ago
02 Oct 2025