2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கொரிய மொழி பரீட்சையின் முடிவுகள் வெளியீடு

Princiya Dixci   / 2015 ஜூலை 07 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அண்மையில் இடம்பெற்ற கொரிய மொழி பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைக்கு தோற்றியவர்கள் தமது பரீட்சைப் பெறுபேறுகளை www.slbfe.lk என்ற இணையத்தளத்தினூடாக தமது பெறுபேறுகளை இன்று செவ்வாய்க்கிழமை (07) அறிந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய இம்முறை கொரிய மொழிப்பரீட்சைக்கு தோற்றிய 13,083 பரீட்சார்த்திகளுள் 4,294 பேர் பரீட்சையில் சித்தியடைந்து வேலைவாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்பரீட்சைக்கான இம்முறை வெட்டுப்புள்ளியாக 100 அமுல்படுத்தப்பட்டுள்ளது. வெட்டுப்புள்ளியை விடவும் அதிகமான புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களது பெயர் விவரங்களை கொரிய மனிதவள திணைக்களம் வெளியிட்டுள்ளது. இவர்களில் நிலுஷh தில்றுக்ஷி 200 புள்ளிகளைப் பெற்று அதிவிசேட சித்தியைப் பெற்றுள்ளார்.
 
பரீட்சையில் சித்தியடைந்து தகுதி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் அவர்களது பிராந்தியங்களிலுள்ள அலுவலகங்களிலேயே இடம்பெறவுள்ளன. 

அவ்வகையில் அநுராதபுரம், கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கடவத்த, மாத்தறை, காலி, மற்றும் தங்காலை உட்பட கொழும்பிலுள்ள தலைமையகத்திலும் இடம்பெறும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X