2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கல்முனையில் தமிழ்க் கல்வி வலயம் வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 08 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கல்முனையில் தமிழ்க் கல்வி வலயமொன்றை  உருவாக்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி  எடுக்கவேண்டும் என்று மாநகரசபை உறுப்பினர் ஏ.விஜயரெத்தினம் நேற்று புதன்கிழமை (08) வேண்டுகோள் விடுத்தார்.

கல்முனை கல்வி வலயத்தில் 21 தமிழ்ப் பாடசாலைகளும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் 26 தமிழ்ப் பாடசாலைகளுமாக மொத்தம் 47  பாடசாலைகள் உள்ளன.  இந்தப் பாடசாலைகளை ஒன்றிணைத்து கல்முனையில் தமிழ்க் கல்வி வலயத்தை  உருவாக்கவேண்டும். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர்; கிழக்கு மாகாணசபையில் கல்வி அமைச்சராக உள்ள இவ்வேளையில், இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X