2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தபால் திணைக்களம் குறுகிய காலத்துக்குள் வளர்ச்சியடைந்துள்ளது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா 
 
தபால் திணைக்களம் குறுகிய காலத்துக்குள் தொழில்நுட்ப துறையில் துரித வளர்ச்சியடைந்துள்ளதாக அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் சீ.அருள்செல்வம், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் கடமையாற்றும் தபால் ஊழியர்களுக்கான (கோல உடை சிறுபணியாளர்கள்) பயிற்சி செயலமர்வு, மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தான் கடமையாற்றும் திணைக்களத்துக்கு விசுவாசமாக செயற்படுவதோடு நன் மதிப்பையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் திணைக்களத்தின் இலக்கை அடைய முடியும்.
 
உத்தியோகத்தர்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதனால் நாமும் சுயமாக முன்னேறுவதோடு திணைக்களமும் வளர்ச்சி அடையும். அப்போதுதான் திணைக்களத்தினால் மக்களுக்கு சிறந்த சேவையையும் வழங்க முடியும்.

அஞ்சல் திணைக்களத்தில் நாடு தழுவிய ரீதியில் தபால் மா அதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும்.

பொதுமக்களுக்கு விரைவாகவும் சிறப்பாகவும் சேவை வழங்குவதற்கு புதிய வேலைத்திட்டங்களான அலைபேசி மீள் நிரப்பல் மற்றும் இலங்கை மின்சார சபை கட்டணப்பட்டியலை சேகரித்தல் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தபால் ஊழியர்கள், பொதுமக்களுடன் சிறந்த முறையில் அணுகி அவ்வாறான வேலைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்ற வேண்டுமென்றார்.

இந்நிகழ்வில் கணக்காளர் என்.ஜெபராஜ், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பைஸர் ஆகியோர் வளவளார்களாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X