2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

24 வது பிரிவின் புதிய தளபதி நியமனம்

Janu   / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா வியாழக்கிழமை  ( 25 ) பதவியேற்றுக் கொண்டுள்ளார் .

24வது டிவிசனுக்கு வந்தடைந்த புதிய பிரிவு தளபதிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.மகா சங்கத்தின் பிரித் சத்காயனா பின்னர்,  தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.

அம்பாறை புத்தங்கல  ராஜகிய பண்டித திகவாபி சுசீம தேரர்  இங்கு மூன்று இனங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில் பணிபுரியும் பலமும் துணிவும் புதிய பிரிவு தளபதிக்கு  கிடைக்குமென ஆசிர்வதித்துள்ளார்.அதன் பின்  24வது பிரிவு வளாகத்தில் மரம் இராணுவ தளபதியினால்  நடப்பட்டுள்ளது .

இந் நிகழ்வில் 24 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள படையணிகளின் பிரிவுத் தளபதிகளும் கலந்து கொண்டு புதிய பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X