2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2ஆம் கட்டக் கொடுப்பனவு திங்கள் ஆரம்பம்

Editorial   / 2020 மே 15 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மே மாதத்துக்கான 2ஆம் கட்ட 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவுகள், இம்மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 29ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

சமுர்த்திப் பயனாளிகள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்புப் பட்டியலில் உள்ளோர், நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு மூன்று கட்டங்களாக பிரித்து ஏப்ரல் மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, தெரிவுசெய்யப்பட்டு, இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டவர்களுக்கே இரண்டாம் கட்டக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பதிலாளர்கள், சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், ஊடகவியலாளர்கள்  என பலர் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .