Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள், அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில், இன்று(15) வழங்கி வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி, காரைதீவு, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒன்றியத்தின் இணைப்பாளரும் பல கண்டுபிடிப்புக்களை நடத்தி இளம் விஞ்ஞானி; என பெயர்பெற்று, நம் நாடடுக்கு பெயர் சேர்த்த சோ.வினோஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணிகளில், அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நாவற்காடு, அக்கரைப்பற்று 7ஃ1 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெற்ற நிவாரணப்பணியில், பிரதேச செயலாளர் கே.லவநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா சம்மாந்துறை கோரைக்கர் கோவிலின் தலைவர் க.மோகன் பல்கலைக்கழக ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



10 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago