2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

5000 ஆரம்ப பாடசாலைகள் திட்டம் கல்முனையில் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜே.எம்.ஹனீபா, அப்துல் அஸீஸ்)

'மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு 5000 ஆரம்ப பாடசாலைகள் மற்றும் 1000 இடைநிலை பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் 2012' நாடாளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் கல்முனை கல்வி வலயத்திலுள்ள சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்திலும் இச்செயற்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மற்றும் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரிகளை பிரதான பாடசாலைகளாகக் கொண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் றியாலுல் ஜன்னா வித்தியாலயம், ஜீ.எம்.எம்.எஸ். புhடசாலை, அல் கமறுன் வித்தியாலயம் என்பன ஊட்டப் பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கமு/சது/  தாறுல் உலும் வித்தியாலயம் மற்றும் கமு/ சது/  முஸ்லிம் மகளீர் வித்தியாலயம்,  கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலயம் ஆகியவற்றின் அபிவிருத்தி நிகழ்வும் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X