2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

6 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து 90 புழுக்கள் அகற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6 வயது சிறுவனொருவனின் வயிற்றுக்குள் காணப்பட்ட  90 புழுக்களும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. 

இது பற்றி தெரியவருவதாவது, 

வயிற்றுவலியால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவனின் வயிற்றை சோதித்தபோது வயிற்றின் பெருங்குடலில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிப்பட்டது.  இதனையடுத்து உடனடியாக இச்சிறுவனை சத்திரசிகிச்சைக்குட்படுத்தி வயிற்றுக்குள் காணப்பட்ட புழுக்களை வெளியில் எடுத்து சிறுவனின் உயிரை வைத்திய  நிபுணர் ஜெமில்  காப்பாற்றியுள்ளார்.

இப்புழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி இரண்டு சென்ரிமீற்றர் நீளமுடையதெனத் தெரிவித்த வைத்தியர்,  தக்கநேரத்தில் சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துவந்ததால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும்  குறிப்பிட்டார்.   இச்சிறுவன்  பல வருடங்களாக பூச்சிகளை அகற்றுவதற்கான மருந்துகளை பாவிக்காத நிலையில் இப்புழுக்கள் வயிற்றில் விளைந்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X