2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

75 கிராம சேவகர் பிரிவுகளில் சனசமூக நிலையங்கள் ஸ்தாபிப்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவச் செயற்பாடுகளில், அடிமட்ட மக்களின் ஆலோசனையையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இம்மாநகர சபைக்குட்பட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளிலும், சனசமூக நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென, மாநகர சபையின் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

மாநகரசபையில், இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பிரதேச மற்றும் சமுதாய நலன்களை உறுதிப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே, கிராம சேவகர் பிரிவுகள் தோறும் சனசமூக நிலையங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும், இதற்கு, நகரில் ஒவ்வொரு பிரஜையினதும் கருத்துகளை உள்வாங்கியே, அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X